Tag Archive: கவிதை

துட்ட பஜனை -கவிதை

என் இலையில் முதல் உருண்டை சூரியனுக்கும் இரண்டாவது நீருக்கும் படைத்தபின் மூன்றாவது உருண்டை என் ப்ரிய துரோகிகளுக்கு திருப்பங்களை உண்டாக்கும் மிகப்பெரிய வெற்றிகளை அவர்களே துவக்கி வைக்கின்றனர்ஹே கோடானுகோடி நட்சத்திரங்களே ஹே அண்ட சராசரமே நூறுகோடி ஆண்டுகளின் ஒளியால் உண்டாக்கப்பட்ட வாளின் சாட்சியாக புனிதமான நதியோடும் குன்றின் உச்சியிலிருந்து ஆணையிடுகிறேன் உங்கள் ஒருஒருவரையும் என் பெயரை உரக்கசொல்லும்பெருமக்கள் சபையை உருவாக்கம் பண்ணுவேன் பெருவெள்ள நாளில் ரொட்டித்துண்டுகள்கிடைக்க வகை செய்து தருவேன் இறுதியாக உங்கல் பெயர் மறைக்கும் வண்ணமாய் கல்லறையில் மலர்…
Read more

சினிமா காதல் 

  படத்தில் அது முக்கியமான காதல் காட்சி நடிக்கும் போது உண்மையாகவே காதலிப்போம் என்றான் நாயகன் ம் என்றால் நாயகியும் வெட்கத்துடன் கண்கள் கலந்தன ..காட்சியும் துவங்கியது இதயங்கள் படபடத்தன ஒன்றிலொன்றாக இணையத்துவங்கின. அன்பே என்றான் அவன் ஒடிந்துசரிந்தாள் அவள் காதல் அவர்களை இலகுவாக்கியது படக்குழுவினர் தோள்களில் பட்டாம் பூச்சி ஈரப்பதம் பெருகி காமிராவில் பனித்துளிகள்……
Read more

கவிதை என்பது யாதெனில் 

கவிதை என்பது யாதெனில்    காலம்..கவிதை கவிஞன் கவிதை பற்றியும் கவிதைகள் எழுதுவது பற்றியும் அதன் நோக்கம் செயல்பாடு ஆகியவை குறித்தும் காலம் தோறும் பல்வேறு கருத்துருவாக்கங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் எப்படி தொல்காப்பியர் காலம் தொட்டே கவிதையின் அரசியல் மற்றும் அறிவியல்கள் பேசப்பட்டு வந்திருக்கிறதோ அது போல மேற்கிலும் கிரேக்க ,மொழியில் அரிஸ்டாட்டில் காலம்…
Read more

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

அதோ லாரி பக்கமாக சுவற்றோரம் சிற்றிடைவெளி நீ இறுக்கிக்கட்ட வாகான இடம் கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும் லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த வரலாற்றை ஆராயாதே நீ லங்கோட்டை இழுத்து கட்டும்போது ஓரு தெரு நாய் உன்னை வேடிக்கை பார்க்கிறது பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய் அந்த நாயோ சட்டென பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை…
Read more

காலாதீதத்தின் சுடர்- கவிதை

நான் ஒரு பூனையை கடக்கிறேன். அது வந்த வழியே திரும்புகிறது …………………………..  ஆற்றின் குறுக்கே நடக்கிறேன் மீன்கள் வழிவிட்டு நட்சத்திரங்களை  பார்க்கின்றன. ……………………………. யுகங்களாய் இருளில் அலறும் பறவை நான்  உன்ஒளிப்பார்வையில்  விரிகின்றன நூற்றாண்டு தொன்மங்கள்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்   1. செருப்பு திருடன் டிங்கோவின் வீட்டிற்கு காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.   முந்தின இரவு குறி சொல்பவளின் வீட்டில் அவளது செருப்பு தொலைந்திருந்தது.   வாசலில் இருந்த பாட்டிமார் இருவர் டிங்கோ ஒரு அப்பாவி அவன் மேல் வீண் பழி வேணாம் என புலம்பிக்கொண்டிருந்தனர்.   டிங்கோவின்…
Read more