Tag Archive: எழுத்து

தமிழ்சினிமா இந்தியசினிமா உலகசினிமா

ரொம்பநாள் கழித்து நேற்று மளிகை கடைக்கு சென்றிருந்தேன் சக்கரைவிலை அநியாயத்துக்கு அதிகமானது பற்றி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தரவயது நபர் சட்டென கைவசம் வைத்திருந்த இரண்டொரு டி.வி.டிக்களைகடைக்காரரிடம் தந்துவிட்டு படம் பின்னி எடுத்துருப்பான் பாத்துட்டு கொடுத்துடுங்க என கூறினார். ஆச்சர்யாமாக் இருந்தது அவர்கள் பரிமாறிக்கொண்டது இத்தாலியபடமான மெலினா மற்றும் சினிமாபாரடைஸோ. ஒருவேளை கொடுத்தநபர் சினிம்மாக்காராரக இருக்கலாமோ…
Read more

மனிதம் என்பதன் உயர்நிலை விளக்கம் – ராம் பால்

 (  ராம்பால்  42,  என்னுடைய நெருங்கிய நண்பர் .. உதவி இயக்குனர். இயக்குனராகும் வாய்ப்புக்காக காத்திருந்தவர். முக நூலில் அசோகமித்ரனுக்கு அஞ்சலிகுறிப்பை எழுதியவர் மறுநாள் அவருக்கு பலரும் எழுதும்படி திடீர் மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். ) 1999  -2000 ம்   வருடங்கள்.தான் என்  சென்னை வாழ்க்கையின் மிக நெருக்கடியான காலகட்டம்.. அப்போது நான் மேற்கு மாம்பலத்தில் பால்சுகந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். . காதல் படத்தில் வருமே அதே மேன்ஷன்தான். சென்னைக்கு கனவுகளுடன்  வாய்ப்பு தேடி வருபவர்களீன்…
Read more

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலும் , ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் – சில பொருத்தப்பாடுகள்

(வாசகசாலை அமைப்பின் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட நிகழ்வுக்காக 14/03/2017 அன்று ஆற்றிய உரை )   வாசக சாலை அழைப்பின் பேரில் சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் நாவல் குறித்து  நான் ஆற்றவுள்ள இந்த சிற்றுரையை கேட்க வந்திருக்கும்  அசோக் நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி .வேத நாயகம் பிள்ளை எழுதிய…
Read more

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

அதோ லாரி பக்கமாக சுவற்றோரம் சிற்றிடைவெளி நீ இறுக்கிக்கட்ட வாகான இடம் கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும் லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த வரலாற்றை ஆராயாதே நீ லங்கோட்டை இழுத்து கட்டும்போது ஓரு தெரு நாய் உன்னை வேடிக்கை பார்க்கிறது பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய் அந்த நாயோ சட்டென பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை…
Read more

காலாதீதத்தின் சுடர்- கவிதை

நான் ஒரு பூனையை கடக்கிறேன். அது வந்த வழியே திரும்புகிறது …………………………..  ஆற்றின் குறுக்கே நடக்கிறேன் மீன்கள் வழிவிட்டு நட்சத்திரங்களை  பார்க்கின்றன. ……………………………. யுகங்களாய் இருளில் அலறும் பறவை நான்  உன்ஒளிப்பார்வையில்  விரிகின்றன நூற்றாண்டு தொன்மங்கள்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்

டிங்கோ புராணம் – கவிதை தொடர்   1. செருப்பு திருடன் டிங்கோவின் வீட்டிற்கு காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.   முந்தின இரவு குறி சொல்பவளின் வீட்டில் அவளது செருப்பு தொலைந்திருந்தது.   வாசலில் இருந்த பாட்டிமார் இருவர் டிங்கோ ஒரு அப்பாவி அவன் மேல் வீண் பழி வேணாம் என புலம்பிக்கொண்டிருந்தனர்.   டிங்கோவின்…
Read more