புதியப்பதிவுகள்

தொடுவானம்

தொடுவானம்       கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால் தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுக் கொண்டிருந்தாள். எதிரே நீலக்கடல் வெளியின் மேல் வீசிய காற்று, சுற்றி கரையாக எழுப்பப்பட்ட கற்சுவர்களின்மீது சிறு அலைகளை  மோதச்  செய்து தளும்பிக் கொண்டிருந்தது.   கடலின் மீது பிரதிபலித்த சூரிய வெளிச்சம் கரையெங்கும்…
Read more

கொலைக்கு பின் சில தத்துவ காரணங்கள்

கொலைக்கு பின் சில தத்துவ காரணங்கள் அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன். மிகவும் சிறியவன் அவன் . தனது தாயின் மரணத்துக்குப் பிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான். பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது. கொலைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் நண்பனிடம் கூறினேன்.நண்பன் மறுத்தான், இல்லை இது திட்டமிட்டு…
Read more

ரோஜா

ரோஜா   ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள் உடலெங்கும் வலிக்கிறார் போல ஒரு குறுகுறுப்பு ..அந்த பூவை மாலையில் தான் துர்கா மந்திர் சாலையில் ஒரு துணிக்கடை அருகே பார்த்த ஞாபகம் வந்தது. மிருதுளாவின் வீட்டுக்கு வந்த போது துணிக்கடைக்கு பக்கத்துக்…
Read more

மலை வீட்டின் பாதை

மலை வீட்டின் பாதை         நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.         சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி…
Read more

ஜீன்ஸ் அணிந்த பறவைகள்

ஜீன்ஸ் அணிந்த பறவைகள் நினைவில் தொலைந்த ஞாபகமொன்று பறவையாகி வானத்தினூடே சிறகசைக்காமல் தாழ்ந்து வந்து தெருக்கோடி மரத்திலமர்ந்து மெல்ல தரையிறங்கி தத்தித் தத்திச் சட்டென ஒரு பெண்ணாக மாறி ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் சகிதம், தன்னை நோக்கி நடந்துவருவதாக அவளை அந்தக் கூட்டத்தினூடே நடைபாதையில் கண்டமாத்திரம் அறிந்துணர்ந்தான்.   ஞாபகங்களை சிறகிடுக்களில் ஒளித்து வைத்தவாறு வெளியினூடாக…
Read more

டினோசர்- 94 ஒரு வரலாற்றுக்கதை

கதை சொல்லிக்கான சில உரிமைகளுடன் இக்கதையின் மூலாதார ரகசியம் குறித்து அடியேன் பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் இருப்பதன் காரணமாகத் தங்களின் அனுமதி வேண்டித் தண்டம் சமர்ப்பித்து நான் சொல்லபோகும் இச்சம்பவத்தைக் கூர்ந்து செவிகட்குமாறு நிர்பந்திக்கிறேன்.        சில நாட்களுக்கு முன் சவிஸ்தாரமாய் மவுண்ட் ரோட்டில் கைவீசி நடக்குங்கால் சட்டென எதிர்பட்டு  “அடடே” எனக் கையைப் பிடித்துக்…
Read more