எம்.கே. தியாகராஜ பாகவதர்

தமிழகத்தின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர். வெறும் பதினாலே படங்களில்அவர்இந்தஉச்சத்தைஎட்டியதுதான்குறிப்பிடத்தகுந்தது.

1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியன்று மயிலாடுதுறை கிருஷ்ண மூர்த்தி ஆச்சாரி என்பவருக்கும் மாணிக்கத்தம்மாளுக்கும் மகனாக பிறந்தார். சிறுவயதின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பு படிக்க முடியாத பாகவதர் தேவாரம், திருவாசகம் போன்ற பஜனை பாடல்கள் பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவராக இருந்தார். ஆனால் அப்பா கிருஷ்ணமூர்த்திக்கோ மகனும் தன்னை போல நகை ஆசாரி குலத்தொழிலை படிக்க வேண்டும் என்பது அவா. ஆனால் தியாகராஜருக்கு இது பிடிக்கவில்லை. அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பாட்டு பஜனை என எங்கு சத்தம் கேட்டாலும் ஓடிச்சென்று அவர்களுடன் சேர்ந்து பாடி அசத்துவார். அப்பாவுக்கோ இது பிடிக்கவில்லை.  அப்போதுதான் மவுன சினிமாக்கள் வளர்ந்து வந்த காலம். தஞ்சாவூரில் அவர் வீட்டின் அருகில் புதிதாய் கட்டப்பட்ட அரங்கில் விட்டல் என்பவர் நடித்த சண்டைப் படங்களை அதிகமாக ரசித்தார். ஒருமுறை படுக்கையில் தலையணைக்கு மேல் போர்வையை போர்த்திவிட்டு இரவு படத்திற்கு போயிருக்கிறார். அப்பா கிருஷ்ணமூர்த்தி இரவு போர்வையை இழுத்துப் பார்க்க குட்டு வெளிப்பட்டது. மறுநாள் அடியால் துடித்துப்போன பாகவதர் வீட்டை விட்டு ஓடினார்.மகனைக் காணாமல் தாயார் மாணிக்கத்தம்மாள் துடித்துப் போக கிருஷ்ணமூர்த்தி ஊர் ஊராக தேடினார். இறுதியில் கடப்பா எனும் ஊரில் மக்கள் கூடியிருந்த கூட்டத்தோடு இவரும் வேடிக்கை பார்க்கப் போக அங்கு நடுநாயகமாக சிறுவன் பாகவதர் பாடிக்கொண்டிருக்க கிருஷ்ணமூர்த்தி பரவசத்துடன் ஓடிச்சென்று மகனை கட்டிப்பிடித்துக்கொண்டார். கூட்டத்தின் முன் தன் மகன்…தன் மகன்… என கிருஷ்ணமூர்த்தி கண்ணீருடன் கூறினார்.

மகனைக்கண்டதும் தாயார் மாணிக்கத்தம்மாளுக்கு ஆனந்த கண்ணீர். உச்சிமுகர்ந்தபடி இனி உன் இஷ்டப்படி பாட்டு, பஜனை, சினிமா என இருக்கலாம் என அனுமதி அளித்தார்.பின் சொல்லவா வேண்டும் தஞ்சாவூரில் எங்கு கச்சேரி பஜனை நடந்தாலும் ஆஜராகிவிடுவார். கூடவே பாடவும் செய்வார். இவரது பாட்டுக்கு மவுசு கூடியது. தியாகராஜருக்கு என தனி ரசிகக் கூட்டங்கள் தோன்றினர். தஞ்சாவூர்தாண்டி திருச்சியிலும் தியாகராஜரின் புகழ் பரவ ஆரம்பித்தது. தியாகராஜரை தேடி வீட்டிற்கு சங்கீத விற்பன்னர்கள் பலரும் தேடி வந்து பார்க்கத் துவங்கினர். அந்நாளில் புகழ்பெற்ற ரசிக ரஞ்சனி சபாவை நடத்தி வந்த எப்.ஜி.நடேச ஐயர் வீட்டிற்கே தேடி வந்து நாடகத்தில் நடிக்க தன்னை அனுமதிக்கும் படி கேட்டார்.

ஹரிச்சந்திரா நாடகத்தில்  மகன் லோகிதாசனாக முதல் நாடகத்தில் நடித்தார். அதுவரை கேள்வி ஞானத்தால் மட்டுமே பாகவதர் பாடி அசத்தி வந்தார். பாகவதரின் குரலையும் திறமையையும் அறிந்த பொன்னுவனய்யங்கார் என்ற குரு அவராகவே வீட்டிற்கு தேடிவந்து கிருஷ்ணமூர்த்தியிடம் பையனை என்னோடு அனுப்பிவையுங்கள் நான் அவனுக்கு குருவாக முறையாக சங்கீதத்தை பயிற்றுவிக்கிறேன் எனக்கூறினார். இப்படி குருவே தேடிவந்த பெருமை  தியாகராஜரின் வாழ்வில் ஒரு முக்கிய அதிசயம்.குரு மூலம் கிருதிகள், கீர்த்தனைகள், சாகித்யங்கள் என தியாகராஜ பாகவதரின் திறமைக்கு அர்த்தம் கூட்டி அவரை மிளிர வைத்தன.

பதிமூன்று வயதுகூட நிரம்பாத நிலையில் மகனுக்கு அரங்கேற்றம் நிகழ்த்த கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார். இந்த பொடியனுக்கா வாசிப்பது என பக்க வாத்தியக்காரர்கள் அலட்சியப்படுத்தினர். பின் அவரது குரு பொன்னுவய்யங்காரே பிடில் வாசிக்க முன்வந்தார். மேதை புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆச்சாரி தவில் வாசிக்க துவக்கமே பிரமாதமாக அமைந்தது. தொடர்ந்து கச்சேரிகள் குவிய குவிய தியாகராஜரின் புகழ் கூடத்துவங்கியது. ஆனாலும் சிறுவயது என்பதால் பலரது பார்வையில் எகத்தளம். தோற்றத்தை மாற்ற முடிவுசெய்தார். கட்டு குடுமியை அவிழ்த்து தோள் வரை தொங்கவிட்டார். கஞ்சிரா வாசித்த தட்சிணா மூர்த்திபிள்ளை அட… என அதை பார்த்து மயங்கி பாகவதர்… தியாகராஜ பாகவதர்… எனக் கூற அதுமுதல் தியகாரஜர், தியாகராஜ பாகவதர் ஆனார். உடன் நாடகத்திலும் ராஜபார்ட்டுகள் பங்கேற்க அழைத்தன. நடிப்பிலும் அசத்த ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். நாடகத்துறையில், யாரோ தியாகராஜ பாகவதராம்… கிட்டப்பாவையே மிஞ்சிடுவானாம்… என பேசிக்கொள்ள துவங்கினர்.

ஒருபுறம் நாடகம், இன்னொருபுறம் கச்சேரி என ரெட்டை மாட்டுவண்டி சவாரியில் பயணிக்க துவங்கினார். சம்பளம் நாளொன்றுக்கு நூறு ருபாய் வாங்கினார். அன்று அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பளம். அதுவே பின் இருநூறு, முன்னூறு என உயர ஆரம்பித்தது. தன் ஸ்பெஷல் நாடகங்களுக்கென கமலா என்ற நடிகையையும் ஒப்பந்தம் செய்துகொண்டார். பிற்பாடு அவரையே திருமணம் செய்துகொண்டார்.

திருவையாறு தியாகய்யர் உற்சவம். ஆண்டுதோறும் இங்கு நடக்கும் சங்கீத விழா இசையுலகின் பெரும்கூடல். இசைக்கலைஞர்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைப்பது ஆஸ்கார் போல ஒரு மிகப்பெரிய அங்கீகாரம். தியாகராஜ பாகவதருக்கு அன்று சங்கீத நாடக உலகில் புகழ் உச்சத்திலிருந்தாலும் தியாகய்யர் உற்சவத்தில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எப்படி தனக்கு கிடைக்காது போகும் என போராடினார். போராட்டம் ஒரு கட்டத்தில் வெற்றிபெற்றது. சரி எல்லோருக்கும் போல உங்களுக்கும் பதினைந்து நிமிடம். அதற்குள் மேடையை காலிசெய்ய வேண்டும் இதுதான் நிபந்தனை  பாகவதர் ஒத்துக்கொண்டார்.அதுவும் பகல் 12 மணி மொட்டை வெயில் கொளுத்தும் நேரம். பலரும் உஞ்ச விருத்திக்கான காலம். பாகவதர் பாடத்துவங்கினார். பதினைந்து நிமிடம் கடந்தபோது பாகவதர் நிறுத்த அரங்கில் ரகளை. பாகவதரை பாடச்சொல்லுங்கள்… பாகவதரை பாடச்சொல்லுங்கள்…எனக்கூச்சல். நிர்வாகம் அனுமதி அளித்தது. பாகவதர் தொடர்ந்தார். மூன்று மணிநேரம் அங்கு இடைவிடாத இசைமழை. அனைவரும் மெய்மறந்து கேட்டனர். இன்னும் கேட்கும் மயக்கத்தில் திளைத்தனர். ஆனால் நிர்வாகத்தினரோ கையை பிசைந்தனர். பாகவதர் முடித்துக்கொண்டார். ரசிகர்கள் பாடச்சொன்னபோது இனி இங்கு பாடுவது நாகரீகமில்லை. உங்களுக்கு என் பாட்டு கேட்கும் ஆர்வம் இருந்தால், என் இருப்பிடம் வாருங்கள் நான் உங்கள் வேட்கை தணியும் வரை சளைக்காமல் பாடுகிறேன் என்றார்.

மறுநாளே தஞ்சாவூர் நாணயக்காரதெருவிலிருக்கும் இராமலிங்க சுவாமிகள் மடத்தில்  பெரும் ரசிகர் கூட்டம் முண்டியடிக்க கச்சேரி துவங்கியது. காலை தொடங்கிய கச்சேரி விடிய விடிய தொடர்ந்தது.

இசையுலகில் அவர் சிலரை மிகப்பெரிய அளவில் மதித்தார்.

ஆலந்தூர் சகோதரர்கள், பாபநாசம் சிவன், திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை மற்றும் விளாத்திகுளம் சுவாமிகள்.

இவர்களில் விளாத்திகுளம் சுவாமிகளுடன் பாகவதருக்கு நெருங்கிய பரிச்சயம்.

ஒருமுறை விளாத்திகுளம் சுவாமிகளை அழைத்துக்கொண்டு காரில் சென்னைக்கு வந்தார். வழிநெடுக இருவரும் பாடல்களையும் கீர்த்தனைகளையும் பாடி சிலாகித்துக்கொண்டு வந்தனர்.

சென்னைக்கு வந்ததும் பாகவதர் புன்னாக வராளி என்ற ராகத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது வீட்டில் பணியாளர்கள் பாம்பு… பாம்பு… எனக் கூச்சலிட்டனர். பாகவதரும் விளாத்திகுளம் சுவாமிகளும் தங்கள் முன் பாம்பு படமெடுத்து நிற்பதைக்கண்டு அதிசயித்தனர். ஒரு வழியாக பாம்பு விரட்டப்பட்டதும் பாகவதர் மீண்டும் பாடத்துவங்க விளாத்திகுளம் சுவாமிகள் கண்ணீர் மல்க பாகவதர் முன் நின்று தொழுதார். காரணம் பாம்புகள் நிறைந்த அவரது விளாத்திகுளம் ஊரில் பலமுறை அவர் இந்த புன்னாக வராளி ராகம் பாடிய போதெல்லாம் வராத பாம்பு இப்போது அரிதாக காணப்படும்  சென்னையில் பாகவதர் பாடலைக் கேட்டதும் வந்திருப்பதை கண்டு பாகவதரது திறமையின் உள்ளடங்கிய தெய்வீகத் தன்மையை கண்டு உள்ளம் உருகி நிற்பதாக சொல்லி வியந்தார்.

நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த டி.கே.எஸ் சகோதரர்கள் தம் சபாவுக்கு நாடகங்கள் நடித்துக்கொடுக்குமாறு அழைப்புவிடுத்தனர்.

ஒருமுறை  திருச்சிக்கு  சென்றபோது அப்போது அங்கு நாடகம்  நடத்திக்கொண்டிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் வள்ளித்திருமணம் நாடகம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடித்த ராதா கிருஷ்ண பாகவதருக்கு உடல்நிலை சரியில்லை. தியாகராஜர் திருச்சியில் தங்கியிருப்பதை அறிந்து நாரதர் வேடத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தார்கள். பாகவதரும் சம்மதித்தார். ஆனால் கடைசி நேரத்தில் கிட்டப்பா,  தியாகராஜர் வேண்டாம்  ராதா கிருஷ்ணனேநடிக்கட்டும்  என மறுத்துவிட்டார். கிட்டப்பாவே, பாகவதரோடு நடித்தால் தன் கவர்ச்சி குறையும் என பயப்படுகிறார் என்பதாக சேதி பரவ துவங்க பாகவதர் புகழ் கூடியது.

சில நாட்கள் கழிந்த பின் செங்கோட்டை சிங்கம் என அழைக்கப்பட்ட கிட்டப்பாவின் சொந்த ஊர் செங்கோட்டையில் பாகவதர் வள்ளித்திருமணம் நடக்கும் தகவல் கேள்விப்பட்டுஅரங்கிற்குள் வந்தார். பாகவதரின் குரலைக்கேட்டு கிட்டப்பாவே மெய்மறந்து இன்னொரு முறை பாடச்சொல்லி கேட்டார். நாடகம் முடிந்த பின் மேடைக்கு ஓடிச்சென்று கழுத்தில் அணிந்த தங்கச்சங்கிலியைகழட்டி பாகவதருக்குஅன்புபரிசாக அணிவித்தார். பாகவதருக்கு இது பெரும் மகிழ்ச்சி. மிகப்பெரிய அங்கீகாரம்.

இலங்கைக்கு நாடகம் நடத்த குழுவுடன் பயணம் செய்தபோது உடன் தந்தை கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துச் சென்றார்.  அங்கு தங்கியிருந்த விடுதியில் குளியல் அறையில் கால் தடுக்கி விழுந்துவிட மருத்துவமனை கொண்டுசென்றும் பலனில்லாமல் இறந்து போனார். தந்தையின் சடலத்தோடு பாதியில் பயணத்தை முடித்துக்கொண்டு  நாடுதிரும்பிய பாகவதர் இறுதி சடங்குகளை முடித்த கையோடு வேறு எந்த காரியமும் செய்யாமல் ஒரு மாதகாலம் வீட்டிலேயே சோகத்தில் மூழ்கிகிடந்தார்.

ஆனால் சபாக்களோ அவருக்காக வீட்டு வாசலில் ஒப்பந்தங்களுடன் மொய்த்துகிடந்தன. மீண்டும் துவங்கியது பயணம்… கச்சேரி நாடகம்.

இச்சூழலில்தான் ஒருநாள் காரைக்குடியில் பவளக்கொடி. எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் நாடகம் நடந்த போதுதான் நாடகத்தை பார்க்க வந்த லேனா செட்டியாரும், இயக்குனர் கே.சுப்ரமணியமும் பாகவதரை சினிமாவில் நாயகனாக நடிக்க வைத்து பவளக்கொடியை சினிமாவாக எடுக்க முன் வந்தனர். பாகவதரும் சம்மதித்தார்.

பவளக்கொடியில் பாகவதர் சம்பளம் 750 தான். ஆனால் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு 100 ருபாய் வாங்கி கொடுத்து பெண்குலத்தைபெருமையுறச் செய்தார்.  பவளக்கொடி 100 வாரங்கள் ஓடியது.

பவளக்கொடிக்கு அடுத்த படம்நவீன சாரங்கதாரா.இதிலும் எஸ்.டி.சுப்புலட்சுமிதான் ஹீரோயின். இயக்குனர் அதே கே.சுப்ரமணியம்.  படப்பிடிப்பின் போதே பாகவதருக்கும் இயக்குனருக்கும் சில விவகாரங்களில் முட்டிக்கொண்டது. பாகவதர் படத்தில்ஞானகுமாரி,நளின சிங்காரி எனும் பாடலை படத்தில் சேர்த்துக்கொள்ளும்படி கே.சுப்ரமணியத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார். அந்த பாடலை வைக்க கதை அனுமதிக்கவில்லை. கதைக்கு பொருத்தமில்லாத பாடலை என்னால்திணிக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனாலும் பாகவதர் விடவில்லை. காரணம் நாடகங்களில் அவரிடம் இந்த பாடலை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்சினிமாவிலும் இந்த பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்பார்கள் என அழுத்தம் திருத்தமாக தன் தரப்பை முன் வைத்தார் பாகவதர். வேறுவழியே இல்லாமல் இயக்குனர் அப்பாடலை தன் விருப்பத்திற்கு மாறாக படத்தில் வைத்தார். படம் வெளியாகும் நாளும் வந்தது. யார் சொன்னது நடக்க போகிறது என இருதரப்பும் ரசிகர்களை எதிர்நோக்கி முதல் நாள் தியேட்டருக்கு சென்றனர். படம் திரையிடப்பட்டது.  அந்த பாடலும் வந்தது.  பாடல் முடிந்ததும் அதிசயம் போல மக்கள் கைதட்டி ஒன்ஸ்மோர் என கேட்கத் துவங்கினர். படமும் வெற்றிப்பெற்றது. இந்த சம்பவத்தால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு உண்டானது.  இதன் அடுத்தகட்டமாக கே.சுப்ரமண்யம் எஸ்.டி.சுப்புலட்சுமி திருமணம் நடக்க பாகவதர் மனம் வருந்தினார். காரணம் எஸ்.டி.சுப்புலட்சுமி பாகவதர் ஜோடி நாடகமேடையில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஜோடி, சினிமாவிலும் அதே வெற்றி பெற்றது. அதனால்தான் எஸ்.டி.சுப்புலட்சுமியையே ஹீரோயினாக போடும்படி தயாரிப்பாளர்களைபாகவதர் வற்புறுத்தினார்.  இனி எஸ்.டி.சுப்புலட்சுமி ஜோடியாக நடிக்கமாட்டார் என்பதால் பாகவதர் மனம் நொந்தார்.  அதற்கேற்றார் போல மூன்றாவது படமான சத்தியசீலன் 1936ல் வெளியாகி தோல்வியுற்றது. அதில் நாயகி புதுமுகம் தேவசேனா. படத்தில் பாகவதர் சண்டை போட்டார்.சண்டைக்கும் பாகவதருக்கும் ஸ்நான பராப்தி என்பார்களே அது.

1937ல்ஒய்.வி.ராவ் இயக்கத்தில் வெளியான சிந்தாமணிதிரைப்படம்பாகவதர் நடிப்பில்நான்காவது படம். சிந்தாமணி எனும் தலைப்பு வேடத்தில் நடித்தவர் அஸ்வத்தாமா. இவர் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகை. சென்னை ராயல் ஸ்டூடியோ தயாரிப்பில்உருவான இப்படத்தின் டைட்டிலில் துவக்கத்தில் அஸ்வத்தாமாவின் பெயர்தான் முதலில் வரும், இரண்டாவதாகத்தான் பாகவதர் பெயர் வரும்.  மேலும் பட விளம்பரங்களிலும் அஸ்வத்தாமாவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்தயாரிப்பாளர்கள். ஆனால் படம் வெளியாகி கொஞ்ச நாளிலேயே பாகவதர் அதை தலைகீழாக மாற்றச்செய்தார். பாகவதரை மக்கள் கொண்டாடினார்கள். பின் பாகவதரின் படங்கள் பெரிதாகவும் அஸ்வத்தாமாவின் படங்கள் சிறியதாகவும் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டது. இப் படத்துக்கு பிறகு அஸ்வத்தமா ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்தார். பின் 1939ல் காசநோய் காரணமாக உலக வாழ்க்கையை துறந்தார்.

அடுத்து அம்பிகாபதி.கதை கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும் சோழ மன்னன் மகள் அமராவதிக்குமான காதல் கதை. கர்ணபரம்பரை வாய்மொழியாக நம் சமூகத்தில் பேசப்பட்டு வந்த இந்த கதையைபடத்தின் இயக்குனரான எல்லீஸ் ஆர் டங்கனால் உள்வாங்க முடியவில்லை. இதனால்இந்த கதையை ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் கதையோடு பொருத்திஅதில் வரும் காட்சிகளை இதில் புகுத்திவிட்டார். அதில் ரோமியோ காம்பவுண்ட் ஏறி குதித்து மாடி வழியாகதிருட்டுத்தனமாக ஜூலியட்டை சந்திக்க வருவார். அம்பிகாபதியிலும்இதுபோன்ற காட்சியமைப்பை எல்லீஸ் ஆர் டங்கன் வைக்க படப்பிடிப்பில் பலரும் இது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாதது, மக்கள் ஏற்கமாட்டார்கள் என டங்கனிடம் எடுத்துகூறினர். ஆனாலும் டங்கன் பிடிவாதமாகஅந்தக் காட்சியை படத்தில் வைத்தார்.  படம் வெளியாகியது. மக்கள் மத்தியில் அந்த காட்சிக்கு பலத்த வரவேற்பு. மக்கள் சினிமாவில் புதுமையை விரும்புகின்றனர் என்பதை பாகவதரும் புரிந்துகொண்டார். படத்தின் வெற்றிக்கு காரணம்காட்சிகளை டங்கன்உணர்ச்சிமயமாகஉருவாக்கியிருந்ததுதான் என்றார்கள். அதற்கு இளங்கோவனின் உரையாடல்கள் பெரிதும் ஒத்துழைத்தன.  பாடல்கள், இசை இரண்டுமே பாபநாசம் சிவன். தொடர்ந்து திருநீலகண்டர், அசோக்குமார் போன்ற படங்கள் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றின் வெற்றித் தொடர்கதை எழுதின.

திருநீலகண்டர் படத்தின் ஒரு காட்சியில்சிவயோகியாக நடித்த செருகளத்தூர் சாமா நீலகண்டராக நடித்தபாகவதரை எட்டி உதைக்க வேண்டும்,பாகவதர்மீது கொண்ட அளப்பரிய மரியாதை காரணமாகசாமா எட்டி உதைக்க மறுத்துவிட்டார். இதனால் படப்பிடிப்பு தாமதமானது, இயக்குனர் ராஜாசாண்டோ அவரை எப்படியோ உருட்டிமிரட்டி பார்த்தும் நடக்கவில்லை. இறுதியில் பாகவதரே சாமாவிடம்உங்களைவிட வயதில் சிறியவன் நான்,இது நடிப்புதான் தைரியமாக உதையுங்கள் எனக் கூறஅதன்பிறகே சாமாபாகவதரை எட்டி உதைத்தார். இயக்குனர்ராஜா சாண்டோவும் மகிழ்ச்சியால் படப்பிடிப்பை தொடர்ந்தார்.

திருநீலகண்டர் படத்தின்வெற்றிவிழா ஒரு திரையரங்கத்தாரால் பிரம்மாண்டமாகஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர் தீரர்சத்தியமூர்த்தி. விழாவின் சிறப்பம்சமாகசத்தியமுர்த்தி பாகவதருக்கு ஜரிகை மாலை போடப்போகபாகவதர் அதற்காக அவர் முன் குனிந்தபோது அதுவரை அவர் கழுத்தில் அணிந்திருந்த பட்டு அங்கவஸ்திரமானது கீழே விழுந்துவிட்டது. இதைக்கண்ட சத்தியமூர்த்தி அவர்கள் பட்டு அங்கவஸ்திரம் கீழே விழும் ஆனால் கதராடை கீழே விழாது… அதனால் இனி நீங்கள் கதராடை உடுத்துங்கள் பலன்மிகும்… என சமயோசிதமாக தனது காங்கிரஸ் கட்சியின் கொள்கையை திணிக்கஅதுமுதல் தானும் கதராடை உடுத்தப்போவதாக பாகவதரும் அறிவித்தார்.

பாகவதரின் தமிழிசைப்பணி,

தமிழுக்கு என்று தனி இசை பாரம்பர்யம் உண்டு, சிலப்பதிகாரம் காவியத்தில் தமிழ் இசை பண்கள் பற்றியும், அதன் கருவிகள் பற்றியும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. பிற்பாடு கிருஷ்ண தேவராயரின் விஜயநகர பேரரசு காலத்தில்கர்நாடக இசையானது தெலுங்கு கீர்த்தனைகளுடன் தமிழுக்கு அறிமுகமாகியது. பின் கொஞ்சம் கொஞ்சமாக தமிழிசையின் முக்கிய கூறுகளை கர்நாடக இசை உள்வாங்கி பிற்பாடு இசையென்றாலே கர்நாடக இசைமட்டும்தான் என்பதாக மக்கள் மத்தியிலே உருவாகத் துவங்கியது.  இச்சூழலில்தான் அருணாச்சல கவிராயர், முத்துதாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆகியோரால் தமிழிசை முழுவதுமாக அழிந்து போகாமல் தொடர்ந்து பண்களையும் பாடல்களையும் இயற்றி காப்பாற்றி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சினிமாவில் பாபநாசம் சிவன் அந்த பணியை திரைத்துறையில் செவ்வனே நிறைவேற்றி தமிழ் இசைக்கு புது ரத்தம் பாய்ச்சி வந்தார். துவக்கத்தில்  பாகவதரும் கர்நாடக இசையில் பாடிவந்தாலும் பிற்பாடு தமிழிசையின் அருமை பெருமைகளை அறிந்து கச்சேரிகளில் தமிழிசைக்கு முக்கியத்துவம் தரத்துவங்கினார். இச்சூழலில் தான் 1940ல் செட்டி நாட்டரசர். ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார் தமிழிசை இயக்கம் ஒன்று துவங்கினார். இந்த இயக்கத்துக்கு தன் எழுத்தின் மூலம் தீவிரமான ஆதரவு பிரச்சாரம் செய்தவர் அமரர் கல்கி அவர்கள். பாகவதரையும் தமிழிசைக்கு முக்கியத்துவம் தரும்படி வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க பம்மல் சம்மந்த முதலியார் 1941ல் சென்னையில் ஒரு மாநாட்டை  நடத்தினார். அதில் கலந்துகொண்டு பேசிய பாகவதர்  தற்காலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் கச்சேரி மேடைகளில் தமிழிசை பின்னுக்கு தள்ளப்பட்டு கர்நாடக சங்கீதமே முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்நிலை மாறவேண்டும் கச்சேரிகளில் தமிழ் பாடல்களையே பாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பாரதியாரின் சொல்லு பாப்பா பாடலையும் பாடினார்.

அடுத்ததாகஅவர்,சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகியபடங்களில்நடித்தார்.ஹரிதாஸ்மூன்றுதீபாவளிகளைக்கண்டுஇன்றுவரைஎவரும்நெருங்கமுடியாதமிகப்பெரியவெற்றியைபெற்றது.

இந்தஇரண்டுபடங்களும்இந்நூலில்விரிவாகஇடம்பெற்றுள்ளன.இக்காலக்கட்டத்தில்லட்சுமிகாந்தன்என்பவர் “சினிமா தூது” என்றஏடுமூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும்இருந்தபிரமுகர்கள்பலர்மீதுபலவிதமானவீண்பழிகளைச்சுமத்தியும்,மிரட்டியும், பணம்பறித்துவந்தார். இந்தப் பத்திரிகை பின்னர்சட்டப்படிதடைசெய்யப்பட்டது.அதன்பிறகு, “இந்துநேசன்” என்றமற்றொரு பத்திரிகை மூலம்எழுதிவந்தார்.

1944 நவம்பர் 9ம் நாள்சென்னையில்இலட்சுமிகாந்தனைசிலர்வழிமறித்துக்கத்தியால்காயப்படுத்தினர்.பொதுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டஅவர்மறுநாள்அதிகாலையில்மர்மமானமுறையில்இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27ம் தேதிபாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின்பேரில்கைதுசெய்யப்பட்டனர்.இவர்களைப்பற்றிஇலட்சுமிகாந்தன்அவதூறாகச்செய்திகள்வெளியிட்டதைக்கொலைக்குக்காரணமாகக்காவல்துறைகுறிப்பிட்டது.நீண்டவிசாரணைக்குப்பிறகுபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன்மற்றும்நால்வர்குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.அதன்மீதுசெய்யப்பட்டமேல்முறையீட்டுமனுக்கள்தள்ளுபடிசெய்யப்பட்டன.

அதன்மீதுமேலும்இலண்டன்பிரிவுகவுன்சிலுக்குமுறையீடுசெய்யப்பட்டது.அதன்பிறகுபாகவதரும், கிருஷ்ணனும்விடுதலைசெய்யப்பட்டனர்.

பாகவதர்சிறையிலிருந்துவெளிவந்ததும்எல்லாப்பற்றுகளையும்விட்டுநீங்கிய, துறவிபோல்ஆகிவிட்டார்.மேற்கொண்டுநடிப்பதற்கானபலஅழைப்புகளைஅவர்தவிர்த்தார்.

இந்தகொலைவழக்குபாகவதரின் சினிமா வாழ்க்கையைமுடிக்கசிலர்செய்ததிட்டமிட்டசதிஎனஇப்போதும்பேசப்பட்டுவருகிறது.எஸ்.எஸ்.வாசன், கல்கி,ராஜாஜிஆகியோர்இதன்பின்புலத்தில்இருந்துள்ளதாகஇப்போதும்வழக்குகுறித்துபேசப்பட்டுவருகிறது.இவ்வழக்கில்1948 இல்இருவரும்குற்றமற்றவர்கள்எனஇரண்டுஆண்டு சிறைக்குப்பின்விடுவிக்கப்பட்டனர்.இருப்பினும்சிறைவிடுதலைக்குப்பின்அவர்நடித்ததிரைப்படங்கள்எதிர்பார்த்தவெற்றியைபெறவில்லை.அதில்நொடிந்துபோனபாகவதர்திரைப்படங்களில்நடிக்கமனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 11959 இல்ஈரல்நோயினால்பாதிக்கப்பட்டுஇளவயதிலேயேமரணமடைந்தார்.தமிழ்த்திரையுலகில்அவரைப்போலவாழ்ந்தவருமில்லை, அவரைப்போலவீழ்ந்தவருமில்லை என்றகருத்துஅவருடையஆத்மரசிகர்களிடையேயும், திரையுலகிலும்நிலவுவதுஉண்டு.

1 Comment

 1. Jan

  Hey,
  lately I have finished preparing my ultimate tutorial:

  +++ [Beginner’s Guide] How To Make A Website From Scratch +++

  I would really apprecaite your feedback, so I can improve my craft.

  Link: https://janzac.com/how-to-make-a-website/

  If you know someone who may benefit from reading it, I would be really grateful for sharing a link.

  Much love from Poland!
  Cheers

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *