ராஜா ரஹ்மான் @ இளையராஜா 75

நேற்று நடந்த இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ஏ.ஆர் ரஹ்மான் சந்திப்பில் ராஜா வழக்கம் போலவே அவரது இயல்புடன் இருந்தார் . ரஹ்மான் மேடைக்கு வந்துவிட்டார் என்ப்தால் அவர் இம்மியளவும் மாறிவிடவில்லை அதுதான் ராஜா அவரைப்புரிந்துகொள்ள இது ஒரு முழுமையான சந்தர்ப்பம் . வழக்கம் போல ரஹ்மானும் ஒரு சிறந்த மனிதப்பண்புடன் வெளிப்பட்டார். ராஜாவிடம் ரஹ்மான் 500 படங்களுக்கு உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார் என்பது உண்மையிலேயே ஆச்சர்யமான தகவல் . இவ்வளவுகாலம் ரஹ்மான் நிற்பதற்கு அவர் ட்யூனை ஒழுங்கமைக்கும் விதம் ஒரு முக்கியகாரணம் . இருவரது வெற்றிக்கும் அதுவே அடிப்ப்டை அந்த ஒழுங்கமைவு வேறு யாருக்கும் அமையவில்லை. . சீரான கட்டமைவு அதில் முக்கியம். அவ்வகையில் ராஜாவிடம் ரஹ்மான் இந்த 500 படங்களில் இதைத்தான் கற்றிருக்கக்கூடும் . என்னதான் பயிற்சி இருந்தாலும் மேதமை இல்லாவிட்டால் படைப்பில் சோபிக்க முடியாது . ராஜாவின் மேதமையும் அவர் விஸ்வநாதனிடம் கற்றுக்கொண்டதாக இருக்கக்கூடும் . மூவரின் வெற்றியுமே காட்சிக்கேற்ற ட்யூன் தேர்வுதான் . பெரும்பாலும் அவை அனுபவ அடைப்படையில் இல்லாமல் ராக அடிப்ப்டையில் இருப்பதுதான் . அதே சமயம் மூவருக்குமே கருவித் தேர்வில் மற்றும் ,இடைப்ப்ட்ட இசைகளில் வேறு வேறு ஞானம் . பெற்றவர்கள்> கருவி தேர்வுகளில் ஒரு கட்டத்துக்கு பிறகு காலமாற்றங்களை உள்வாங்குவது முக்கியம். இதில் ரஹ்மான் கம்ப்யூட்டர் இசையை பயன்படுத்தியதால் பிற்பாடு வந்தவர்கள் அவரை அப்படியே பாலோ செய்தனர். ஹாரீஸ் ஜெய்ராஜ் அனிருத் ஆகியோர். இந்த இடத்தில்தான் ராஜா மற்ற எல்லோரையும் விட ஞானம் பெற்றவர். அதற்கு அவரது மேற்கத்திய சாஸ்த்ரீய இசையின் அளப்பரிய ஞானம் உதவியது . ரஹ்மானுக்கு அது மிகப்பெரிய குறை . அவருக்கு கிளாசிக்குகளில் அவ்வளவு பரிச்சயம் போதவில்லை . பல சமயங்களில் இந்துஸ்தானி அரபி இசைதான் அவருக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது .. அது போல கர்நாடிக் வெஸ்டர்ன் கிளாசிக்குகளை கலப்பதிலும் ராஜா இருவரையும் விட சிறப்பானவர் . மேலும் நாட்டுப்புற இசைக்கருவி மற்றும் பாட;ல் பின்னணி இசைகளில் தமிழ் சினிமாவின் எந்த இசையமைப்பாளரும் ராஜாவின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. காரணம் அவருக்கு கிராமத்து நிலவியல் தெரியும் . அதை முழுமையாக அனுபவித்தவர் . இதைத் தெரிந்த வேறு யாருமே இந்த இசைத்துறைக்குள் வர முடியவில்லை வரவும் முடியாது அப்படியே வந்தாலும் அவர்கள் சாஸ்திரியா கர்நாடிக் மற்றும் வெஸ்டர்ன் கிளாசிக் மற்றும் மெலோடியில் ஞானம் பெற வாய்பேயில்லை இப்படி ராஜாவின் தனித்த்ன்மைகளை எழுதிக்கொண்டே போகலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *