சினிமா காதல் 

 

படத்தில் அது முக்கியமான காதல் காட்சி

நடிக்கும் போது உண்மையாகவே

காதலிப்போம் என்றான் நாயகன்

ம் என்றால் நாயகியும் வெட்கத்துடன்

கண்கள் கலந்தன ..காட்சியும் துவங்கியது

இதயங்கள் படபடத்தன ஒன்றிலொன்றாக

இணையத்துவங்கின.

அன்பே என்றான் அவன்

ஒடிந்துசரிந்தாள் அவள்

காதல் அவர்களை இலகுவாக்கியது

படக்குழுவினர் தோள்களில் பட்டாம் பூச்சி

ஈரப்பதம் பெருகி காமிராவில் பனித்துளிகள்…

ஒளி சேவகர் காலிடுக்குகளில் மேகக்கூட்டங்கள்

பின்னிய விரல்களுக்குள் பெரு நதி பிரவாகம்

கட் என்ற சொல் காதலை பிரித்தது.

தேர்ந்த நடிப்பு  பாராட்டினான் நாயகன்

வணக்கம் சொல்லி வெட்கத்துடன்

குளிர்பதன வண்டி ஏகினாள் நாயகி

அடுத்த காட்சிக்கு ஒரு

ஏணி கொண்டுவா என்றார் இயக்கம்

ஆளாய் பறந்தது கூட்டம்

மூலையில் சுருண்டு கேட்பாரற்று கிடந்தது

எதுவோ ஒன்று

.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *