ரோஷாமான்: திரைக்கதையின் உச்சம் , அகிராகுரசேவா

குலை வெளிவந்த கையோடு வாழை இறந்துபடுவது போல இயற்கையின் சில நியதிகள் பலசமயங்களில் நம் முதுகில் குத்துவதாக இருக்கிறது. நல்ல சிறுகதை எழுதுகிறவர்கள் நாற்பதாவது வயது வரும் போது அவர்களாகவே படுத்துக்கொண்டு கண்னை மூடி நிம்மதியாய் மண்ணில் புதைந்து விடவேண்டும் என்பதும் அப்படி ஒரு விதி. இந்தவிதிக்கு உட்பட்டு இறந்த பல எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜப்பானை சேர்ந்த Ryūnosuke Akutagawa ரியோன்ஸுகே அகுட்கவா

ஜப்பானிய சிறுகதை உலகின் தந்தையான இவர் எழுதிய இரண்டு சிறுகதைகள்தான் ரோஷமான் எனும் மா காவியம் உருப்பெற அடிப்படை காரணம். அதில் ஒன்றுதான் 1914ல் அகுட்கவாவினால் எழுதப்பட்ட ’இன் எ குரோவ் ” எனும் சிறுகதை. இதுகுறித்து பின்னாளில் ஒரு பேட்டி ஒன்றின்போது பதிலளித்த குரசேவா..அகுட்குவாவின் இக்கதை மனித மனங்களை கீறி கீறி ஆராய்ந்து கொண்டே செல்கிறது.அது நமக்கு வெளிப்படுத்தும் ப்யங்கரத்தை என் பார்வையாளனுக்கு சொல்ல நினைத்தேன் ரோஷமான் எனக்குள் பெரும் மனஅவசத்தை உண்டாக்கியதற்கும் இதுவே மூலகாரணம் .எனகூறியிருந்தார்.

அப்படிப்பட்ட இக்கதையை இவருக்கு முதன் முதலாக எடுத்துச்சொல்லி அதற்கான திரைக்கதையுடன் முதலில் குரசேவாவிடம் கொண்டுவந்தவர். Shinobu Hashimoto ”ஷினோபு கஷி மொட்டோ” .இவர் குரசேவாவின் நண்பர். அவரோடு இகிரு, இடியட் போன்ற படங்களில் இணை திரைக்கதையாளனாக பங்கு வகித்தவர்.அவர் தந்த திரைக்கதை குரசேவாவுக்குள் மெல்ல ஒரு சலனத்தை உண்டாக்கிகொண்டிருந்தது. அடுத்தபடம் என்ன என்ன என நச்சரித்த தயாரிப்பாளரிடம் இதுதான் கதை என கூறி அனுமதியும் பெற்றுவிட்டார்.

.பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைகளனாக கொண்ட இக்கதை ஒரு சாமுராய் வீரன், அவனது மனைவி. ஒரு வழிப்பறித்திருடன் மற்றும் ஒரு மரவெட்டி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் உடன் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை எனும் இரண்டு சம்பவங்களையும் பின்னணியாக க்க்கொண்டு கதை கட்டமைக்கப்ப்பட்டிருந்தது. கதைக்குள் ஆழம் பூடகத்தன்மை ,நாடகீயம் என அனைத்தும் இருந்தாலும் திரைக்கதையாக குரசேவாவுக்குள் இது முழுதிருப்தி அளிக்கவில்லை.

கதைக்குள் இருக்கும் மர்மத்தை காட்சி ரூபமாக உணர்த்த இன்னும் ஏதாவது சேர்த்தால்தான் திரைக்கதையில் கூடுதல் ஆழமும் பரிணாமமும் கிட்டும் என்பதை உணர்ந்தார். அத்ன்பிறகு இருவரும் இதற்கான இணைகதையை தேடிய போதுதான் அவர்களுக்கு கிடைத்தது மற்றொரு சிறுகதை .அந்த கதையின் தலைப்புதான் ரோஷமான்.. ரோஷமான் என்றால் கோட்டை வாயில் பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலில் மழைக்கு ஒதுங்கும் மூன்றுபேர் தங்களுக்குள் சமீபத்தில் நடந்த, தாங்கள் சாட்சிகளாக பங்கேற்ற ஒரு கொலைவழக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனூடே பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலும் அதன்மீது பொழிந்து வழியும் பேய் மழையும் இதர இரு பாத்திரங்களாக ஆசிரியரால் வருணிக்கப்பட்ட்டிருந்தன.

இந்த கோட்டையும் மழையும் கதையின் உட்பொருளை உணர்த்துவதாக இருக்க இதனை முதல்கதையாகவும் அகுட்கவாவின் முதல்கதை இன் எ குரோவ் கதையை ப்ளாஷ் பேக்கிலும் வைத்து இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க துவங்க குரோசவா எனும் இயக்குனரின் கனவில் பிரம்மாண்டமாக விரியத்துவங்கியது ரோஷமான்.

திரைப்படம் பேய் மழையிலிருந்து துவங்குகிறது.ரோஷாமான் எனும் பிரம்மாண்டமான நுழைவாயிலில் மழை கொட்டுகிறது.அதன் இண்ண்டு இடுக்குகளில் மழை சீறிபாய்கிறது. நுழைவாயிலை ஒட்டிய மண்டபத்தில் நானகைந்து குடியானவர்கள் தஞ்சம் புகுந்து பேசிக்கொள்கின்றனர். அப்போது இருவர் தாங்கள் நேரில்கண்ட விசாரணையை வியப்புடன் இன்னொருவனுக்கு சொல்ல துவங்குக்கின்றனர்.. விசாரணைக்கூடம் காண்பிக்கப்படுகிறது. வழிப்பறிதிருடன் ஒருவன், கொல்லப்பட்ட சாமுராய், சாமுராய் வீரனின் மனைவி , வழிப்போக்கனாக இவை அனைத்தையும் கண்ட மரவெட்டி ஆகியோரின் சாட்சியங்களின் வழி அவரவர் கொலையை பற்றி விவரிக்கின்றனர். இதில் கொலையுண்ட சாமுராய் வீரனின் சாட்

சியம் ஆவி உருவில் அவனது மனைவியின் வாயிலாக காண்பிக்கபடுகிறது . ஒரு சம்பவத்துக்கு ஒரு உண்மைதான் இருக்க முடியும் ஆனால் இங்கோ அவரவர் கொலையை அவரவர் கோணத்தில் விவரிக்கின்றனர் . நால்வர் சொலவதும் நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.ஆனால் ஒருவர் சொல்வதற்கு முற்றிலும் த்லைகீழான உண்மையாகவும் இருக்கிறது. இறுதியில் யார் சொல்வது உண்மை என கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமல் படமும் முடிகிறது. ரோஷ்மான எனும் பிரம்மாண்ட கட்டிடமும் மழையும் அனைத்திற்கும் சாட்சிகளாக நட்ந்த சம்பவங்களை கேட்டும் கேளாமல் நின்றுகொண்டிருக்கிறது.

அதுவரை ஜப்பானிய சினிமாவில் இல்லாத உள்ளழுத்தமும் பூடகமும் வெளிப்பாடாற்ற தன்மையுமாக அகிராகுரோசாவா இப்படத்தை இயக்கிருந்தார். இதனாலேயே ஜப்பனிய திரைப்பட உலகம் இத்திரைப்படத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்தே நிராகரித்து வந்தது. தயாரிப்பாளர்கள் கதையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை என குறைகூறினர். அகிராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் கூட திரைக்கதையின் பலம் குறித்து போதிய புரிதல் இல்லாமல் படப்பிடிப்பிலிருந்தே விலகிக்கொண்டனர்.இப்படி பலராலும் ரோஷமான் வெறுக்கப்பட்டதற்கு காரணம் படத்தில் திட்டமான ஒருவரிக்கதையில்லை. கதை பார்வையாளனின் யோசனைக்கு தள்ளப்படுகிறது. இதற்குமுன் இப்படியான திரைக்கதைகள் அவர்களது அனுபவ உலகத்தில் இல்லாததால்தான் இதெல்லாம் ஒரு கதையா என சுண்டு விரலால் அத்னை ஒதுக்கிதள்ளினர்.

ஆனால் குரசேவா திட்டமாக இத்திரைக்கதைய்யை நம்பினார்.கதையின் ரகசியம்தான் திரைக்கதையின் வெற்றி அது பார்வையாளனுக்கு தெளிவாக கூற வேண்டிய அவசியமில்லை காட்சிகளின் மூலம் அவனது ஆழ்மனத்தில் உணர்த்தினால் போதுமானது என குர சேவா நம்பினார்.இதனாலேயே படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான் நுழை வாயிலுக்காக குரசேவா மிகவும் மெனக்கெட்டார்.தனது கற்பனையை விட அது பிரம்மண்டமானதாக இருக்கவேண்டும் என விரும்பினார்.

பல புத்த கோவில்களுக்கு சென்று இறுதியில் ஒன்றை தேர்வு செய்தார்.புராதன நகரமான கியோட்டோவின் வடக்கு மூலையிலிருந்த நுழைவாயில் அவரை மிகவும் கிளர்ச்சியுறசெய்தது.பின் அது போன்ற ஒன்றை நிர்மாணிக்கும் படி தன் கலை இயக்குனர்களுக்கு அவர் கட்டளையிட அது அத்னையும் விட பிரம்மாண்டமானாதாக அமைந்து காட்சிக்குள் ஒரு புதிர்த்தன்மையை இயல்பாக வடித்து தந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து திரைப்படம் 1950ல் வெளியானபோது ஜப்பனில் பலரும் கடுமையாக எதிர்த்தனர். ஜப்பானியர்கள் தத்துவங்களை காட்டிலும், வாழ்க்கையையும் உறவுகளையுமே அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் புரியாத இத்திரைப்ப்டம் குரசேவாவுக்கு மேற்கு நாடுகளின் கலாச்சாராத்தின் மீதான் ஈடுபாட்டையே காண்பிக்கிறது . என பொறிந்துதள்ளினர். ஆனால் படத்தை பார்த்த ஒரு இத்தாலிய ஆசிரியர் ஒருவர் இப்படத்தை இத்தாலியின் வெனிஸ் திரைப்ப்டவிழாவுக்கு பரிந்துரை செய்தார்.ஆனால் ஜப்பான் அரசாங்கமோ குரசேவாவை விட எங்களின் இயக்குனரான ஓசு தான் எங்கள் வாழ்க்கைய்யை திறம்ப்ட சொல்கிறார் அவரது படத்தை வேண்டுமானால் அனுப்புகிறோம் என முரண்டு பிடித்தது.
இப்படியாக பல ப்ரச்னைகளை கடந்து இப்ப்டம் இறுதியாக போட்டியில் கலந்து கொள்ள,இறுதியில் விழாவின் சிறந்த படத்துக்கான தங்க சிங்கம் விருது இப்படத்துக்க வழங்கப்பட்டது. அன்று அரங்கில் எழுந்த பலத்த கைதட்டலுடன் மேடையில் உயர்ந்தது குரசேவா எனும் பெயர் மட்டுமல்ல போரினால் உருக்குலைந்த ஜப்பானியர்களின் மனோதிடமும் உறுதியும் தன்னம்பிக்கையும் தான். அதே போல ரோஷ்மானுக்கு பிறகுதான் உலக அரங்கில் ஜப்பான் சினிமாவுக்கு முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது.
தொடர்ந்து அமெரிக்காவிலும் இன்னும் பல படவிழாக்களில்லும் கலந்து கொண்டு இத்திரைப்ப்டம் பரிசுகளை அள்ளிக்குவித்துக்கொண்டே இருக்க குரசேவா உலகின் த்லை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் அறியப்பட்டார்.

ரோஷ்மான் திரைப்ப்டத்திற்கு கிடைத்த பெருமைகளுக்கு அத்ன் திரைக்கதை மட்டுமே காரணமல்ல. மாறாக அதன் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சப்த ஒருங்கிணைப்பும் கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக முக்கிய காரணிகளாகும்.குறிப்பாக ஒளிப்பதிவில் ரசம் பூசப்பட்ட கண்னாடிமூலம் வெளிச்சத்தை நடிகர்களின் முகங்களில் பிரதிபலைக்கச்செய்யும் உத்தி முத்ன முதலாக இப்படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல சூரியனை நேரடியாக காமிராமூலம் படம்பிடிதத்தும் இப்படத்தில்தான் முதல் முறை.

படத்தில் வழிப்பறி திருடனாக நடித்த மிஃபுனே குரசேவாவின் நிரந்தர நாயகானாக தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு முறை படப்பிடிப்பினூடே குரசேவா குழுவினருடன் மார்டின் மற்றும் ஓசா ஜான்சன் ஆகியோர் இயக்கிய ஆப்ரிக்கா எனும் படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒருகாட்சியில் சிங்கம் ஒன்று நடந்து போக உடனே மிபுனே என கத்தினார் குரசேவா .மிபுனே குரசேவாவை திரும்பிபார்க்க அதோ திரையில் நடக்கும் சிங்கத்தை பார்.நம் படத்தில் நீ இது போலதான் நடக்க வேண்டும் என உத்தரவிட மிபுனேவுக்கு அந்த நிமிடமே மூக்கின் கீழ் மீசை சிலுப்பிக்கொண்டு உருவெடுக்க துவங்கியது. ப்டத்தில் மிபுனேவின் உடலில்கட்டுதெறிக்கும் அசாத்திய முறுக்குக்கெல்லாம் பின்னணியாக குரசேவாவின் இந்த கட்டளைதான் இயங்கியது. ஒரு நடிகனுக்குள் இயக்குனர் எவ்வளவு ஆழமாய் ஊடுருவ முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *