சிறுமி கூட்டு வன்புணர்வும் இந்திய சமூகத்தின் பாலியல் மன நோய்களும்

சென்னையில் நேற்று 17 பேர் சேர்ந்து 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை வன்புணர்வு செய்த சம்பவமும் அதையொட்டி கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படமும் பின்னர் அவர்களை வக்கீல்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்குவதையும் பார்க்க முடிந்தது . உண்மையில் அந்த வக்கீல்கள் தர்ம ஆவேசத்தில் இதைச் செய்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் செயலுக்கு இன்னொரு காரணம் இருக்கிறது..

தங்களை புனிதப்படுத்திக்கொள்ள கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள அவர்களது உடல்கள் செய்த அவசர வேலை அது. இந்தியாவில் பொதுவாக ஒவ்வொரு மனித உடலும் பாலியல் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டதாகவே கட்டமைக்கபப்பட்டிருக்கிறது. . இதனாலேயே தன்னை புனிதமானவானாய் புண்ணீயம் பெற தகுதியுடையவனாக காட்டிக்கொள்ள சந்தர்ப்பங்களை எதிர்நோக்குகிறது. பிச்சைக்கராணுக்கு காசு போடும்போது மனசுக்குள் உருவாகும் பெரு நிம்மதி போல கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட்டமாய் சேர்ந்து தர்ம அடி போடுவதில் ஆர்வம் காட்டுவதும் இதனால்தான்

இது போன்ற பாலியல் கூட்டு வன்புணர்வுகள் த்ற்போது அடிக்கடி நிகழ்வதை பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. இதற்கு தீர்வு என யோசித்தபோது ஏன் ஐரோப்ப நாடுகளீல் உள்ளது போல குறைந்த விலையில் இந்தியாவில் செயற்கை முலைகள் யோனிகள் விற்பனைக்கு கொண்டுவரக்கூடாது என்றே தோன்றுகிறது.

இந்தியா வின் இந்த செக்ஸ் மனநோய்க்கு மிக முக்கிய காரணம் பெண்ணூறுப்புகள் மேல் கட்டப்பட்ட மதம் அதற்கு காரணமாக இருக்கும் சாதிய அமைப்பும்தான் ஒருபக்கம் பெண் உடல் உறுப்புகளை ் புனிதமாக்கி கொண்டாடும் நாம் அதே வேளையில் இன்னொருபக்கம் அதை பாவம் என்றும் மறைகக படவேண்டிய பொருள் என்றும் குற்ற உணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறோம் . வயதுவந்த ஒரு ஆண் அவன் உடல் தேவைக்காக ஒரு பெண்ணூறுப்புகளை அடைய கல்யாணம் எனும் பிரம்மாண்ட சாதியயை காப்பாற்றும் சடங்கிற்காக காத்திருக்க வேண்டிருக்கிறது .
அதுவே பெண்ணுக்கும் . இயற்கை சேர்க்க நினைப்பதை பிரித்து வைத்து அதற்கு ஆயிரதெட்டு சடங்கு சம்பிரதயாம் என போலி வார்த்தைகளை காலம் காலமாக கூறி காப்பாற்றி தடுக்க தடுக்க இயல்பாகவே போதுமான வாய்ப்பு இல்லாமல் வன்முறைக்குள் போய் முட்டி நிற்கிறது . வேலைகாரண்மாகவோ அல்லது வேறு பல காரணத்தினாலோ குடும்பத்தை விட்டு வெளியேறுபவன் காம் இச்சையில் உழலும் போதும் இது போன்ற வன்புணர்வுகள் நிகழ்கின்றன. எந்த பெண் உடல் சுலபமாக கைக்குகிடைக்கிறதோ அதனுள் மூர்க்கமாக தன்னை திணிக்கும் உடல் வெறிக்கு சிலர் தள்ளப்பட்டு மிகபெரிய வன்புணரவுகளை செய்கின்றனர் .. முழு பாலியல் சுதந்திரம் தான் ஒரே தீர்வு என சொல்லவரவில்லை. அதை முழுமையாக நடைமுறைக்கு கொண்டும் வரமுடியாது .

இந்தியர்களின் செக்ஸ் மன நோய்க்க்கு முறைப்படுத்தப்பட்ட பாலியல் தொழில் அல்லது அதுசார்ந்த இது போன்ற உப தொழில்களை உண்டாக்குவதே சிறந்தது . எப்படி பல வருட போராட்டத்துக்கு பின் ஆணுறை இலவசம் எனும் திட்டத்துக்கு அரசாங்கம் எய்ட்ஸை கட்டுப்படுத்த இந்த திட்டத்துக்கு தயாரானதோ அதே போல அரசாங்கமே இதையும் முன்னின்று செய்ய வேண்டும் .

இது நம் நாட்டின் நோய் என்ற அக்கறையோடு செயல்பட்டால் தான் நடக்கும் இல்லாவிட்டால் அடித்தே கொல்வது எனும் காட்டுமிராண்டித் தனங்களுக்கு தான் திரும்ப வேண்டும் மேலும் இன்றைய பெருநகர விரிவாக்கம் காரணமாக கூட்டம் கூட்டமாக தங்கள் வாழிடங்களை விட்டு குடும்பங்களை விட்டு இளைஞர்கள் வேறு மாநிலங்களில் தங்குகின்றனர். அவர்கள் இயல்பான் பாலியல் தேவையை மொபைல் போன்கள் அதிகமாக்குமே தவிர முடித்து வைக்க முடியாது அவன் கடந்து செல்லும் ஒவ்வொரு நம் பெண் உறுப்புகளை அடையமுடியாத பொக்கிஷமாகத்தான் பார்ப்பான் . வன்முறைகள் இப்படித்தான் அதிகரிக்கின்றன. அவனுக்கு தனடனை பெற்றுதருவது மட்டுமே தீர்வில்லை. அபன் பாலியல் மனநோய்க்கு பொறுப்பாகும் இந்த பிரம்மாண்ட நகர வளர்ச்சி அத்ற்கு என்ன தீர்வை செய்கிறது . இதற்கு யார் பொறுப்பு ?

முறைப்படுத்தப்பட்ட பாலியல் விடுதிகள் இதை ஓரளவுக்கு குறைக்க வழி செய்யும். இதனால் தான் பண்டைகாலங்களீல் பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் இருந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததும் அது அவர்களை கடுமையான ஒடுக்குதலுக்கு தள்ளீ இழிவான நிலைக்கு தள்ளீயது தாசி எனும் சொல் வேசி எனும் வசைசொல்லாக மாறீயது இந்தியாவில் பாலியல் மனநோய்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நம் நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் இதுதான் ஆதாரம் இந்த வன்முறைகளுக்கு தீர்வு மேற்சொன்னவிடயங்கள் தான் இந்திய மன நிலை இப்படி நான் சொன்னதும் முதலில் அருவருப்படையும் ஆனால் உண்மை இதுதான் கால்ம் மெல்ல அவர்களை இதை நோக்கி நகர்த்தும் .

2 Comments

 1. Yiimp Pool

  Great article, very useful !!

  Reply
  1. ajayan bala (Post author)

   நன்றி

   Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *