Monthly Archive: January 2018

41 வது புத்தகக் கண்காட்சியும்- பாக்கெட்டில் மிஞ்சிய கடல்மண்ணும்

மனித முகங்களை பார்த்துக்கொண்டேயிருபபதின் தீராத காதல் கொண்டவன் நான். அதனாலாயே ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் தவறாமல் ஆஜர் ஆவேன் . 14 வது துவங்கி ஓரிரு வருடங்கள் தவிர அனைத்து புத்தகக் கண்காட்சியிலும் ஆவி போல அங்குமிங்குமாய் திரிந்து கொண்டேயிருப்பேன். இது வரை பார்வையாLனாக இருந்த நான் சமீபமாக பதிப்பாளனாகவும் பங்கெடுத்து வருகிறேன் ….
Read more

நதியை தேடி நடந்த கடல் : வெர்ஜீனியா உல்ஃப்

இன்று வெர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) பிறந்த தினம் வெர்ஜீனியா உல்ஃப் புகழ்பெற்ற ஆங்கில பெண் எழுத்தாளினி. எண்ணற்ற சிறுகதைகள் நாவல்கள் கட்டுரைகள் மற்றும் கடிதங்களாக எழுதிக்குவித்தவர். ஆங்கில நவீன இலக்கியத்தை கட்டமைத்த டி.எஸ் எலியட். மற்றும் ஜேம்ஸ் ஜாய்சுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்கிறது விமர்சன…
Read more

முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்

சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில் ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில்…
Read more

உலக சினிமாவில் இந்தியத் தடங்கள்

இந்திய சினிமா 1972க்கு முன் உலக சினிமாவில் இந்தியத் தடங்கள் உலக சினிமாவின் போற்றத்தக்க படங்கள் வரிசையில் இந்தியாவின் பதேர் பாஞ்சாலிக்கு பிறகு மகத்தான படங்கள் எதுவும் வரவில்லை. காந்தி(Gandhi), பண்டிட் குயின்(Bandit Queen), ஸ்லம் டாக் மில்லியனர்(Slumdog millionaire) என இந்தியாவில் உருவான ஆங்கிலப்படங்கள் அவ்வப்போது சில சலனத்தை உலக அரங்கில் உருவாக்கி வந்தாலும்…
Read more

புழுதியில் அலையும் நிழல்கள் – அஜயன் பாலா

கோணங்கியுடன் அலைந்து திரிந்த என் பழைய டைரிக்குறிப்புகள் சென்னைக்கு வந்த புதிதில் எந்த இலக்கியக் கூட்டம் போனாலும் அங்கு கோணங்கியை ப்பற்றி யாராவது இருவர் பேசிக்கொண்டேயிருப்பார்கள், ஒரு சாகச வீரன் போல மாய வித்தைக்காரன் போல கோணங்கியின் பேரைச் சொல்லும்போதெல்லாம் அவர்களின் கண்களில் பரவசம் துள்ளும். செம்பூர் ஜெயராஜ். சென்னை எனக்கு பரிசளித்த முதல் நண்பர்…
Read more

என்னை வளர்த்த ஏலூர் வாடகை நூல் நிலையம் ..

ஏலூர் வாடகை நூல் நிலையம் மூடப்படவிருக்கும் செய்தியை நண்பர் ஒருவர் சற்று முன் முக நூலில் பகிர்ந்திருப்பதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள். சென்னையில் துவக்க நாட்களில் நான் படித்த சில முக்கியமான ஆங்கில புத்தகங்கள் இங்கிருந்துதான் . அக்காலத்தில் (1997 &,1998 ) வலைத்தளம் புழக்கமில்லாத காலத்தில் ஏதாவது நல்ல ஆங்கில புத்தகங்கள் படிக்க…
Read more