செய்குதம்பி பாவலர்

பிறப்பு :31-7-1874

மதங்களை கடந்தது தமிழ் என நிரூபித்துக்காட்டும் வகையில் வாழ்க்கையை. தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர் பாவலர் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பெற்ற செய்குதம்பி பாவலர்.

அக்காலத்து திருவிதாங்கூர் சமஸ்தானமாகவும் இன்றைய நாகர்கோவில் மாவட்டமாகவும் விளங்கக் கூடிய  தமிழகத்தின்  தென்கோடி பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர் செய்குதம்பி பாவலர்.சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப்பபட்ட செய்குதம்பி அங்கிருந்த ஆசிரியர்களை தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்கவைத்தார். திருக்குரானை அவர்கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை  இரண்டாம் வகுப்புக்கு  மாற்றினர் அதே  ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார்.பின் தமிழின் பால் ஏற்பட்ட ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயன அண்ணாவி என்பவரிடம் நன்னூல்,இலக்கண விளக்கம் வீரச்சோழியம்,தொல்காப்பியம்போன்ற இலக்கண நூல்களை கற்றார்..

தமிழில் தன்னிகரற்ற புலமையும் பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார்.கமபராமாயணம் சீறாப்புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பை பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர் காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுரு இராமலிங்க அடிகளாரின்பால் ஈர்ப்புகொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்று சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில்  தீர்ப்புகூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது.வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில்  தொடர்ந்து கொண்டிருந்தது. திரு.விக மற்றும்  கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவை கடுமையாக  எதிர்த்து அதில் இலக்கண பிழைகள் இருப்பதாக கூறி அதனை நிராகரிக்க முற்பட்டபோது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையை கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பா தான் என விளக்கிகூறியபோது அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்லலாரை அனைவரும் ஏற்க துவங்கினர்..

இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை , நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம், இன்னிசை பாமாலை, திருக்கோட்டாற்று பதிற்று பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடதக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர் சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி எனும் பெயரும் சேர்ந்துகொள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

மறைவு;13-02-1950

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *